என் உடலில் அந்தப் பிரச்சனை இருந்தது அதனால் தான் சினிமாவை விட்டு விலகினேன்.! மனம் திறந்த கௌசல்யா

kausalya
kausalya

Actress Kausalya: பிரபல நடிகை கௌசல்யா தான் சினிமாவை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து மனம் திறந்து கூறி இருக்கும் தகவல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த இவர் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் கோலிவுட்டில் மிகப்பெரிய பிரபலத்தை பெற்றார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய், சூர்யா, பிரபுதேவா, கார்த்திக், பிரபு என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இவ்வாறு சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார். அப்படி இவரின் முதல் படமான காலமெல்லாம் காதல் வாழ்க படத்திடம் பெற்றிருந்த ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் பாடலை ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது.

இவ்வாறு இளசுகளின் மனதில் நீங்கா இடம் பிடித்த கௌசல்யா சந்தோஷ் சுப்பிரமணியம் படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு மொத்தமாக விளங்கினார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த கௌசல்யா ஏராளமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய திருமணம் செய்து இணையதளத்தில் வருவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஏனென்றால் மக்கள் இன்னும் என்னை மறக்கவில்லை ஏதாவது ஒரு விஷயத்தை என்னை பற்றி பேசுவது நல்லது தான். நான் திருமணத்தை எதிர்ப்பவள் இல்லை திருமணம் என்பது ஒரு அழகான விஷயம் எனக்கும் என் கருத்துக்கும் பிடித்தமான ஒருவர் எனக்கு கிடைக்கவில்லை. அப்படி ஒருவரின் வாழ்க்கையில் இருந்தார் ஆனால் அது பிரேக்கப் ஆகிவிட்டது இப்பொழுது நான் என் பெற்றோர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

நான் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டது இதற்காக நிறைய மாத்திரைகளை சாப்பிட்டதால் திடீரென உடல் எடை கண்ணா பின்னா என்று ஏறிவிட்டது. இந்த காரணத்தினால் தான் நான் சினிமாவை விட்டு விலகினேன் இப்போது அந்த பிரச்சனை சரியாகி மீண்டும் பழைய கௌசல்யாவாக வந்து இருக்கிறேன்.

மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது இதற்கான சரியான வாய்ப்பு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். விஜய் தான் என்னுடைய க்ரஷ் அவருடன் சேர்ந்து நடித்த பிரியமுடன் திரைப்படத்தை என்னைக்குமே மறக்க மாட்டேன் அந்த படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம் என்று கௌசல்யா கூறியுள்ளார்.