வயது 38 ஆனாலும் இளம் வயது மாப்பிள்ளையை வளைத்து போட்ட நடிகை கத்ரீனா கைஃப்..! காதல்ல இதெல்லாம் சகஜமப்பா..!

katrina-kaif-2

பாலிவுட் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை கத்ரினா கைஃப் இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதன் முதலாக அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான பூம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் பாலிவுட்டில் கால் தடம் பதித்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிங் இஸ் கிங், பாடிகார்ட், அக்னிபாத், போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றது மட்டுமில்லாமல் தற்போது பாலிவுட்டில் மிக அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை கத்ரீனா கைஃப் தான் நடிக்கும் திரைப்படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்வது வழக்கம்தான் இந்நிலையில் நமது நடிகை விக்கி கௌஷல் என்பவரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

இவற்றை நிரூபிக்கும் வகையில் ஹர்ஷவர்தன் அவர்கள் பேட்டியில் பேசிய பொழுது கத்ரினாவும் விக்கியும் காதலிப்பது உண்மை என்று கூறிஉள்ளார் அந்தவகையில் கத்ரினா மற்றும் விக்கி ஆகிய இருவரும் தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடி உள்ளார்கள்.

இந்நிலையில் அவர்கள் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது மட்டுமல்லாமல் கத்ரினா நடிக்கும் திரைப்படத்தில் நமது விக்கி உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

katrina kaif-1
katrina kaif-1

இந்நிலையில் இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் டிசம்பரில் இவருடைய திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.  மேலும் இந்த திருமணமானது ஜெய்பூரில் மிக பிரம்மாண்டமான ஹோட்டல் ஒன்றில் நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த வகையில் இவர்கள் இருவருமே பாலிவுட்டில் மிகப் பிரபலமானவர்கள் என்பதன் காரணமாக பல்வேறு பிரபலங்களும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.