ஒரே ஒரு கேமராவுக்கு ஊரே அலருச்சி இங்க வேற 100 கேமரா சொல்லவா வேணும்.! சுசித்ரா பற்றி விமர்சித்த கஸ்தூரி.! சுசித்ராவின் பதிலடியை பார்த்தீர்களா

kasthuri
kasthuri

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது இந்த நிலையில் நான்காவது சீசன் இந்த வருடத்தில் தொடங்கியுள்ளது, இந்த நான்காவது சீசனில் இதுவரை ரேகா மட்டுமே வெளியேறியுள்ளார், அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் தொகுப்பாளினி அர்ச்சனா உள்ளே வந்துள்ளார்.

பொதுவாக ஒயில்ட் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வரும் போட்டியாளர் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி எந்த ஒரு சம்பவம் நடக்கவில்லை, முதல் வைல்ட் கார்ட் போட்டியாளர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே வந்ததும் உடனடியாக அடுத்த வைல்ட் கார்ட் போட்டியாளர் உள்ளே வந்து விடுவார், அந்த வகையில் பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார் என தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவர் பின்னணி பாடகியாக பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார், இவர் பாடலைப் பாடிய பொழுது கூட பிரபலமாகவில்லை ஆனால் சுசிலீக்ஸ் மூலம் பிரபலம் அடைந்து விட்டார், தமிழ் சினிமாவில் பிரபலங்களின் பலான வீடியோவை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார் ஆனால் அவர் கூறுகையில் இதை நான் செய்யவில்லை என்னுடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டது என ஒரே போடாக போட்டு விட்டார்.

பாடகி சுசித்ரா ஒயில்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே வருவதால், அவரை பற்றி  முன்னாள் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட கஸ்தூரி ட்விட செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது Suchileaks புகழ் சுசித்ரா போறாங்களாம். ஒரு கேமரா contentக்கே ஊரே அலறிச்சு… இங்கே 100 கேமெரா ! Housemates strictly maintain social distance!.

இதற்கு பாடகி சுசித்ரா பதிலளித்துள்ளார், சுசித்ரா கூறியதாவது நான் பிக்பாஸில் நுழைவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட அனைத்தும் தாக்குதல்களுக்கும் என்னால் முடிந்த வரை பதிலளிப்பேன் என்று பதிலளித்துள்ளார், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.