Actress Kasturi : நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்தவர். தற்போது இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு இல்லை என்றாலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்.
இவர் தமிழ் படம் திரைப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டார், ஒரு சில பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்து வருகிறது, இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களைப் போல் பல பிரபலங்களும் வீட்டிலேயே இருக்கிறார்கள் இந்த நிலையில் கஸ்தூரி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பரிதாபமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் பின்புறத்தில் நடுத்தெரு என பெயர் எழுதப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை வெளியிட்டு ‘கடைசியில் இதுதான் மிச்சம்’ என மக்களுக்கு ஏற்பட்ட அவலம் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கஸ்தூரி குதிரைவாலி அரிசியை பயன்படுத்தி எவ்வாறு இட்லி தயாரிப்பது என்பதை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.