பொதுவாக நடிகைகள் என்றால் அதிகபட்சமாக பத்து அல்லது பதினைந்து வருடங்கள் மட்டும் தான் அவர்களால் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடிக்க முடியும் அதுவும் ஒரு சில நடிகைகள் மட்டுமே தங்களது கட்டுக்கோப்பான உடல் அமைப்பினாலும் சிறந்த நடிப்பு திறமையினாலும் இத்தனை வருடங்கள் தொடர்ந்து முன்னணி நடிகர்களாக நடித்து வரும் முடியும் அதிலும் ஒரு சிலர் பாதியிலேயே கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் சினிமாவை விட்டு வெளியேறியவர்களும் இருக்கிறார்கள்.
90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து தற்பொழுது கிடைக்கும் கேரக்டர்களில் நடித்து வருபவர் நடிகை கஸ்தூரி. இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி விட்டார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
தற்பொழுது இவர் சர்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதாவது சினிமா ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கேள்வி எழுப்பும் பலருக்கு பதில் அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதன் மூலம் பலரிடம் திட்டு வாங்கியும் வருகிறார்.
ஆனால் ஒரு தரப்பு ரசிகர்கள் இவர் அளிக்கும் பதில் மிகவும் தைரியமாக இருப்பதால் ஆதரவு அளித்து வருபவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்பொழுது இவர் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்லீவ்லெஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது இவருக்கு 47 வயது இருக்கும் எனவே ரசிகர்கள் இந்த வயதில் இந்த ட்ரெஸ் எல்லாம் தேவைதானா என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.