சமூக வலைதள பக்கத்தில் ஏதேனும் சமூக ரீதியான பிரச்சினைகள் இருந்தால் அதில் முதலில் குரல் கொடுக்கும் நடிகைகளில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். அந்த வகையில் பல்வேறு பிரச்சனைகளுக்கு சமூகவலைத்தள பக்கத்தில் குரல் கொடுத்து வருகிறார் கஸ்தூரி.
இவ்வாறு அவர் சில பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவிப்பதன் மூலமாக அது சம்பந்தப் பட்டவர்களை இவை கடுப்பாகும் அளவிற்கு இருந்தாலும் அதனைக் கண்டு ஒருபோதும் அஞ்சியது கிடையாது. அந்த வகையில் ரசிகர்களும் பல்வேறு வார்த்தைகளை உபயோகித்து அவரை திட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இவ்வாறு கஸ்தூரி வெளியிடும் கருத்துக்களுக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஒரு சில ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் இதன் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை கஸ்தூரி இப்படி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்துள்ளார் இவ்வாறு அவர் திரையில் நடிக்கும் பொழுது குடும்ப பெண் போல புடவையில் இழுத்து போர்த்திக்கொண்டு நடித்ததை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.
ஆனால் தற்போது அதற்கு மாறாக வயது முதிர்ந்ததைக்கூட மறந்துவிட்டு கஸ்தூரி இணையத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் புல்லட் பாண்டி என்ற பாடலுக்கு நடிகை கஸ்தூரி புடவை கட்டிக்கொண்டு நடுரோட்டில் ஆடும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
இவ்வாறு வெளியான வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருவது மட்டுமல்லாமல் பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.