சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அவர் நடித்து முடித்து பல ஆண்டுகள் ஆனாலும் கூட அவரை மறக்க முடியாது. ஆனால் அந்த நடிகர் நடிகை சாதித்து அளவிற்கு அவர்கள் வாரிசுகள் பெரிதாக சினிமாவில் சாதிக்க முடியாமல் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு ஓடியவர்களும் உள்ளார்கள்.
அந்த வகையில் 80கட்டத்தில் கொடிகட்டி பறந்து தமிழ் ரசிகர்கள் மனதில் தற்போது வரையிலும் மறக்கமுடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராதா. ராதா எந்த அளவிற்கு சினிமாவில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாரோ அதே போல் தனது மகளையும் சினிமாவில் வளர்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அந்த வகையில் இவருக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் இவர்கள் இருவரையுமே சினிமாவில் ராதிகா அறிமுகப்படுத்தினார். 2வது மகள் துளசி நாயர் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துவிட்டு திரைப்படங்களில் இவரின் நடிப்பு சொல்லும் அளவிற்கு கவனிக்கப்படாததால் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.
பிறகு அடுத்ததாக மூத்த மகள் கார்த்திகா நாயர் 2009ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ஜோஸ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு தமிழில் கோ படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து அன்னக்கொடி, போறம்போக்கு என்கின்ற பொதுவுடமை ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இத்திரைப்படத்திற்கு பிறகு மிகவும் குண்டானதால் அவருக்கு பெரிதாக திரைப்பட நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் தனது தங்கை போலவே இவரும் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். கலிபோர்னியா மற்றும் லண்டன் போன்ற இரு நாடுகளையும் சுற்றிய சமீப புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.