கோ பட நடிகை கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

Actress Karthika Nair Engagement Photo

Actress Karthika Nair Engagement Photo: நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதை இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். 1980-களில் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் கலக்கி வந்தவர் தான் நடிகை ராதா இவர் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இதனை அடுத்து ரஜினி, கமல், விஜயகாந்த், சிவாஜி என பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

சினிமாவிற்கு அறிமுகமான 10 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த ராதா 1991ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ராதாவுக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவருமே சினிமாவில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே இதன் காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர். அப்படி தற்பொழுது கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் இருவரும் இணைந்து ஹோட்டல் பிசினஸ் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கார்த்திகா நாயர் படிந்து வருகிறாராம் இந்நிலையில் நடிகை நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதாவது தனது வருங்கால கணவரை கட்டுப்படுத்த படி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கையில் உள்ள மோதிரம் தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இவ்வாறு இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மாப்பிள்ளை யார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Actress Karthika Nair Engagement Photo
Actress Karthika Nair Engagement Photo

கார்த்திகா நாயர் கேவி ஆனந்த் இயக்கிய கோ பட மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனை அடுத்து பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி, எஸ்பி ஜனனாதன் இயக்கிய புறம்போக்கு என்கிற பொதுவுடமை என மொத்தம் மூன்று படங்களில் மட்டுமே நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி உள்ளார்.