actress kanikha new look photo: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் திரைஉலகில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் ஆட்டோகிராப், டான்ஸர், வரலாறு, எதிரி போன்ற படங்களில் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தமிழில் பிஸியாக வலம் வந்தாலும் அவ்வப்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடிக்க தொடங்கினார். இவர் கடைசியாக தமிழில் அஜீத் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய ஹிட்டடித்த வரலாறு படத்தில் நடித்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பிற மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். இருப்பினும் அங்கும் சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் 2002 ஆம் ஆண்டு ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்பொழுது கனிகா அவர்களுக்கு சாய் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் விக்ரம் நடித்து வரும் கோப்ரா மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான மா குறும்படம் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மேலும் பட வாய்ப்பிற்காகவும் தனது ரசிகர்களை மீட்டெடுப்பதற்காக அவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது அவர் சல்லடை போன்ற உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
#kanika #actress pic.twitter.com/72CHtwmkPU
— Tamil360Newz (@tamil360newz) May 17, 2020