பிரபல தொலைக்காட்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகவுள்ள அஜித் பட நடிகை.! எந்த தொலைக்காட்சி தெரியுமா.?

ajith-kumar
ajith-kumar

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தல அஜித்.இவர் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி இருந்தது இத்திரைப்படத்தை தொடர்ந்து வலிமை திரைப்படம் விரைவில் அறிமுகமாகும் என்று கூறியுள்ளார்கள். எனவே வலிமை என்பதற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலாக காத்து வருகிறார்கள்.

இந்நிலையில் தல அஜித் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை ஒருவர் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அந்தவகையில் 5 ஸ்டார் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை கனிகா. இத்திரைப்படத்தை தொடர்ந்து சேரன் நடிப்பில் வெளிவந்த ஆட்டோகிராப் மற்றும் அஜித் நடிப்பில் வெளிவந்த வரலாறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

அதன் பிறகு இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் தொடர்ந்து கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு முன்னணி நடிகையாக கலக்கி வந்த இவர் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.

kanika
kanika

அந்தவகையில் இவர் திரைப்படங்களில் நடிக்க வில்லை என்றாலும் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

பிரபல சன் டிவியில் தேவயானி நடித்திருந்த கோலங்கள் சீரியல் இயக்கிய திருச்செல்வம் 5 பெண்களின் கதையை மையமாக வைத்து ஒரு சீரியலை இயக்கவுள்ளார் இதன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாக உள்ளார் கனிகா.