ஆண்டின்னு சொன்ன பலரையும் புகைப்படத்தை வெளியிட்டு வாய்பிளக்க வைத்த நடிகை கனிகா.! வைரலாகும் புகைப்படம்.

kaniha-tamil360newz
kaniha-tamil360newz

நடிகை கனிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடிகையாக நடித்து வந்தவர் கனிகா, இவர் நடிகை மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் வலம் வந்தார், 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முதன் முதலில் 5 ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனைத்தொடர்ந்து, ஆட்டோகிராப், டான்சர் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

பின்பு 2006 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகிய வரலாறு திரைப்படத்தில் நடித்திருந்தார், வரலாறு திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பு அமையாததால் மலையாளம் திரை உலகிற்கு சென்றார் மலையாளத்தில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இவர் சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி கதாபாத்திரம் அமையவில்லை இந்த நிலையில் அவர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை கனிகா சமீபத்திய புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் ஆண்டி எனக் கிண்டல் செய்தார்கள் இந்த நிலையில் இவர் புடவையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.