தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய வீட்டில் அத்துமீறி நுழைந்தால் கொல்லப்படுவீர்கள் என மிரட்டும் வகையில் வீட்டிற்கு முன்பு போர்டு வைத்திருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் இது மிகவும் தவறு என கூறி வருகின்றனர்.
நடிகை கங்கனா ரனாவத் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நிலையில் இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுடைய வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவருடைய சிறந்த நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது மேலும் இதனை அடுத்து இந்தியில் அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் கங்கா தற்பொழுது தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் இவருடைய காட்சிகள் முழுமையாக முடிந்துள்ள நிலையில் கடைசி நாளில் கேக் வெட்டி பட குழுவினர்கள் வழி அனுப்பி வைத்தனர்.
இப்படிப்பட்ட நிலையில் இவர் தன் வீட்டிற்கு வெளியே வைத்துள்ள அறிவிப்பு பலகை தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த அறிவிப்பு பலகையில், “வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள், அதில் உயிர் பிழைத்தவர்கள் மீண்டும் சுடப்படுவீர்கள்” என்று எழுதப்பட்டுள்ளது.
எனவே அந்த அறிவிப்பு பலகை புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் மிரட்டும் வகையில் இவ்வாறு அறிவிப்பு பலகை வைத்திருப்பது சரியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இதனால் கங்கனா ரனாவத் மீது ரசிகர்கள் மிகவும் கடுப்பிலிருந்து வருகிறார்கள்.