கரகாட்டக்காரன் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்து ஏராளமான ரசிகர்கள் மனதை கட்டிப்போட்டவர் தான் நடிகை கனகா. இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இருக்கிற இடம் தெரியாத அளவிற்கு மாறிப் போய் உள்ள நிலையில் அவருடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தேவிகா இவருடைய மகளாக சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை கனகா. தன்னை போல் கனகா வரக்கூடாது என்பதில் தேவிகா கவனமாக இருந்தார் ஆனால் கனகா வேறு வழியில்லாமல் சினிமாவில் நடிக்கும் சூழல் ஏற்பட்டது. அதாவது இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனால் கனகா நடிக்க தொடங்கினார்.
பாடலாசிரியராக பிரபலமடைந்த கங்கை அமரன் ராமராஜனை வைத்து கரகாட்டக்காரன் படத்தை இயக்க ஆரம்பித்தார் எனவே அந்த படத்தில் நடிப்பதற்கு ஹீரோயின் மட்டும் சில காலங்களாக கிடைக்கவில்லை இவ்வாறு பல இடங்களில் தேடியும் இந்த படத்தில் நடிக்க எந்த ஒரு ஹீரோயினும் முன் வரவில்லை எனவே இந்த சமயத்தில் அவரது வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேவிகா தனது மகள் கனகாவுடன் கலந்துக் கொண்ட நிலையில் அப்பொழுது அவரை சமாதானம் செய்து கனகாவை ஹீரோயினாக நடிக்க வைத்தார்.
தேவிகாவுக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் இந்த படம் சுமாராக ஓடும் என நினைத்தார் ஆனால் எதிர்பாராத விதமாக திரையரங்குகளில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது இவ்வாறு கனகாவின் முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியினை தந்த நிலையில் இதனை அடுத்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
அப்படி கரகாட்டக்காரன் படத்தினை தொடர்ந்து அதிசய பிறவி, தங்கமான ராசா, பெரிய இடத்துப் பிள்ளை, துர்கா, எங்க ஊரு ஆட்டக்காரன், அம்மன் கோவில் திருவிழா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிறமொழி படங்களை ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார்.
இவ்வாறு சினிமாவின் உச்சத்தில் இருந்து வந்த இந்த நேரத்தில் அவரது தாய் தேவிகா உயிரிழந்தது கனகாவிற்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது அப்படி இவர் கடைசியாக தமிழில் விரலுக்கேத்த வீக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதனை அடுத்து தற்பொழுது கனகாவின் வாழ்க்கையில் நடந்த சில தகவல் தெரியவந்துள்ளது அதாவது தனக்கு எல்லாமாக இருந்த தாய் உயிரிழந்ததை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். அப்பொழுது மூத்த நடிகர் ஒருவர் தனது மகனை கனகாவிடம் பிஏவாக சேர்த்து விட்டாராம் அவர் பெயர் ராமச்சந்திரன். ராமச்சந்திரனும் கனகாவை தேற்றி பழைய நிலைமைக்கு கொண்டு வந்த நிலையில் அந்த சமயத்தில் கனகாவை அவரும் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இது தெரிந்தவுடன் கனகா ராமச்சந்திரன் தன்னை பாலியல் ரீதியாக பார்க்கிறார் என தவறாக புரிந்துக் கொண்டு வேலையிலிருந்து நீக்கி அனுப்பி விட்டாராம். ஆனால் ராமச்சந்திரனோ உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார் அவர் உயிரிழந்த பிறகு தான் தன்னை ராமச்சந்திரன் உண்மையாகவே காதலித்திருப்பது தெரிய வந்திருக்கிறது இவ்வாறு தாயின் உயிரிழப்பிற்கு பிறகு ராமச்சந்திரனும் இவ்வாறு உயிரிழந்தது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு நடந்ததற்கு பிறகு முழுமையாக தனிமைப்படுத்திக் கொண்ட கனாகா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்தார். அப்பொழுது ஒரு சமயம் கனகாவின் வீடு எரிந்து விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் வீட்டிற்கு எதுவும் ஆகவில்லை பிறகு இந்த செய்தியை தெரிந்துக் கொண்ட பத்திரிகையாளர்கள் கனகாவின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்கு கனகா ஏன் நான் மட்டும்தான் உங்களுக்கு செய்தியா? உலகில் வேறு செய்தியே இல்லையா என கடுப்பாகி கத்தினாராம். இவ்வாறு கனகா மிகவும் மன உளைச்சலில் இருப்பதைத் தெரிந்துக் கொண்ட பத்திரிகையாளர்களும் மீண்டும் வந்து உள்ளனர். இவ்வாறு தொடர்ந்து இரண்டு உயிரிழப்பு தான் கனகாவின் மன உளைச்சலுக்கு காரணம்.