நடிகை கனகா வீட்டில் நடந்த தீ விபத்து.? உதவியாளர் சொன்னதை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்.

kanaka
kanaka

சினிமா உலகில் வாரிசு நடிகர் நடிகைகளின் வரவேற்பு அதிகரித்து காணப்படுகிறது அந்த வகையில் சிவாஜி உள்பட பல நடிகர்களுடன்  ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தவர் தேவிகா. அவருடைய மகள்  கனகா கரகாட்டக்காரன் என்னும் படத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமானார். முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது.

தொடர்ந்து திரை உலகில் வெற்றி நடிகையாக வந்த இவர் படபிடிப்பு தளத்தில் யாரிடமும் பேசவும் மாட்டார் தனிமையை அதிகம் விரும்பக் கூடியவராக இருந்தார். இப்படிப்பட்ட நடிகை கனகா அம்மாவின் மறைவுக்கு பிறகு  முற்றிலுமாக நடிப்பதை தவிர்த்தார் மேலும் 2007 ஆம் ஆண்டு முத்துக்குமார் என்பவருடன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். வெறும் 15 நாட்கள் கழித்து முத்துக்குமாரை விட்டு கனகா பிரிந்து சென்றார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அப்பாவுடன் சொத்து பிரச்சனை என அடுத்தடுத்த பிரச்சனைகளை இவர் சந்தித்ததால் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல்  தனிமையில் வசித்து வந்தார். ஒரு தடவை 50 வயதாகிவிட்டது இனி சினிமாவில் நடிக்க விரும்பினாலும் வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என ஏதேதோ சொல்லினார். சமீபத்தில் கூட நடிகை கனகாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

கனகா பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது தவறி விழுந்ததில் துணி பற்றி தீ விபத்து ஏற்பட்டது. இதை கேள்விப்பட்ட தீயணைப்பாளர்கள் அங்கு சென்று உள்ளனர் ஆனால் கனகா அவர்களை வீட்டிற்குள் விட அனுமதிக்கவில்லை நீண்ட நேரம் கழித்து அவர்கள் உள்ளே சென்றனர். அப்பொழுது வீடு முழுக்க ஒரே குப்பை ஆங்காங்கே மூட்டை முடிச்சுகள் கட்டி இருந்தன இதையெல்லாம் தாண்டி சென்று தீயை அணைத்தனர்.

அப்படி கனகாவுக்கு என்னதான் நடந்தது என்பதை தெரிந்து கொள்ள கனகாவுக்கு தற்பொழுது உதவி செய்து வரும் அவரின் உதவியாளரிடம் கேட்ட போது நெருங்கிய உறவினர்களின் மோசமான நடவடிக்கையால் தான் கனகா இப்படி மாறிவிட்டார் அவர் என்ன கேட்டாலும் செய்து கொடுக்க நான் இருக்கிறேன் அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் அவரின் வாழ்க்கையை அவர் வாழ எந்த இடையூறும் செய்ய வேண்டாம் என கூறினார்.