திரையுலகை கலக்கும் நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘இதய திருடன்’ என்ற திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியானது இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக காம்னா நடித்து வந்தார். அதன்பிறகு இவர் தமிழில் ’ராஜாதிராஜா’ ‘மச்சக்காரன்’ ‘காசேதான் கடவுளடா’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடவிலும் நடித்து வந்தார். காம்விற்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி வந்தது.
இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூரில் தொழிலதிபரான ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிகை காம்னாவுக்கு இரண்டு குழந்தை உள்ளனர். இந்த நிலையில் நடிகை காம்னா இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.எந்த புகைப்படமாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காம்னா சமீபத்தில் அன்னையர் தினத்தின் போது தனது இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை காம்னவுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா என்று ஆச்சரியப் பட்டு வருகிறார்கள்.
மேலும் இது தொடர்ந்து நடிகை காம்னா வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ககளை குவித்து வருகின்றனர். இதுவரையிலும் தன் மகள்களை காட்டாத காம்னா அன்னையர் தினத்தின் போது தன் மகள்களின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதற்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.
எனவே, ரசிகர்கள் நடிகை காம்னாவின் அடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள். நடிகை காம்னாவிற்க்கு இரண்டு குழந்தைகள் இருந்தாலும் இன்று வரையும் யங்காக இருக்கிறார் இதய திருடன் படத்தில் நடித்தபோது ரசிகர்கள் நடிகை காம்னாவின் அழகை ரசித்து வந்தார்கள். அதன் பிறகு நடிகை காம்னா அந்தப் படத்தில் நடித்த மாதிரியே தான் இன்று வரையும் இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.