தமிழ் சினிமாவில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றன மேலும் அந்த பிரபலங்கள் எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுடன் கைகோர்த்து ஜோடி போடுவதால் அவரது மார்க்கெட் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
அந்தவகையில் மாளவிகா மோகனன் , பிரியங்கா மோகனன் ஆகியோரை தொடர்ந்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்துள்ளார். முதலில் இவர் 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஹலோ என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தமிழில் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு வந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து புத்தம் புது காலை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் பிரியதர்ஷினி. இப்போ சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிநடை போட்டு வரும் படம் மாநாடு.
இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இவர் நடித்து உள்ளார். இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்னுக்கு பெரிய அளவு கதாபாத்திரம் இல்லை என்றாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை திறம்பட நடித்ததால் தற்போது அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். மேலும் ரசிகர்களை கவரும்படி இவர் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
கல்யாணி பிரியதர்ஷன் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மாநாடு திரைப்படத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் அந்த படத்தில் அவர் நடித்ததற்காக சுமார் 25 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.