29 ஆண்டுகள் கழித்து தனது 48 வயதில் முத்த காட்சியில் நடித்த கஜோல்.! தனது கணவரை பழிவாங்க தான் இப்படி செய்தாரா?

kajol
kajol

kajol; முத்த காட்சிக்காக தயங்காமல் பலமுறை கஜோல் ஒத்திகை பார்த்திருக்கிறார் என சக நடிகர்கள் கூறியிருந்த நிலையில் இதனை அடுத்து ரசிகர்களும் இதனை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். எனவே தனது கணவரை பழிவாங்கவே கஜோல் இப்படி நடந்துள்ளார் என சர்ச்சையை கிளப்பியுள்ளனர். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கஜோல் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்.

இவருடைய அம்மா தனுஜா பிரபலமான ஹிந்தி நடிகை ஆவார் அதேபோல் இவருடைய தந்தையும் சோமு முக்கர்ஜியும் பிரபலமான திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் 1992ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இவருடைய முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்று தந்தது.

இதனை அடுத்த தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக மாறினார். இந்நிலையில் நடிகர் அஜய் தேவ்கானை கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகிய இவர் சமீப காலங்களாக அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கஜோல் முத்தக் கட்சியில் நடித்தது குறித்து நடிகர் ஆலி அளித்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ட்ரையல் என்ற வெப்த் தொடரில் நடித்திருந்தார் இதில் இவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டினர்.

மேலும் இந்த வெப் தொடரில் கஜோல் ஒரு முத்தக் கட்சியில் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த வயசில் இது தேவைதானா என பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இது குறித்து சக நடிகர் ஆலி கூறியதாவது, ஒரு ஆடம்பரமான ஹோட்டலில் அந்த காட்சி படமாக்கப்பட்டது முக்கியமான நபர்கள் மட்டுமே இருந்தனர்.

படத்திலிருந்த இந்த காட்சியை படமாக்கும் பொழுது கஜோலுக்கு எந்த விதமான வெட்கமும், கூச்சமும், தயக்கமும் இல்லை. அவர்கள் அந்த காட்சி எடுக்கும் பொழுது இரண்டு மூன்று முறை ஒத்துகை பார்த்துவிட்டு தான் நடித்தார் என்று கூறினார். மேலும் நடிகை கஜோல் 29 ஆண்டுகளில் எந்த ஒரு லிப் லாக் காட்சியிலும் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் 48 வயதில் இவ்வாறு செய்துள்ளார். இவருடைய கணவர் அஜய் தேவ்கன் சமீபக் காலங்களாக நடித்த படங்களில் ரகுல் ப்ரீத் சிங், எரிகா கர் போன்ற தன்னுடைய வயதிற்கு குறைவான நடிகைகளுடன் முத்த காட்சிகளில் நடித்தார் இதனால் தான் தன்னுடைய கணவரை பழிவாங்கவே கஜோல் இப்படி ஒரு முத்த காட்சியில் நடித்திருக்கிறார் என விமர்சனம் செய்து வருகிறார்கள்.