டிரஸ்க்கு ஏத்த மாதிரி தான் காசு.. திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மையை அப்பட்டமாக சொன்ன நடிகை காஜல் பசுபதி

kajal-agarwal
kajal-agarwal

சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர், நடிகைகள் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தன் திறமையை வளர்த்துக் கொண்டு பின் ஹீரோ, ஹீரோயின்னாக அவதாரம் எடுத்து வெற்றியை பெறுகின்றனர் ஆனால் ஒரு சில நடிகர், நடிகைகள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தனது வாழ்க்கையே அதிலேயே முடித்து விடுகின்றனர்.

வகையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை காஜல் பசுபதி. இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் இவருக்கு இதுவரை சொல்லும் கொள்ளும் படி பெரிய கதாபாத்திரங்கள் வந்தது கிடையாது பெரிதும் இவர் ஐட்டம் டான்ஸ், கிளாமர் காட்சிகளில் தான் அதிகம் தென்பட்டு இருக்கிறார்.

இப்பொழுதும் அதுபோன்ற வாய்ப்புகள் தான் காஜல் பசுபதிக்கு தொடர்ந்து கிடைக்கிறதாம்.. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை காஜல் பசுபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் நடக்கும் சில விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது.. செல்லமே திரைப்படத்தில் நடிக்கும் போது என்னுடைய சம்பளம் வெறும் 600 ரூபாய் தான்.

இந்த மாதிரி சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு ஒரு நாள் கூலி என்பது குறைவாகத் தான் இருக்கும்.. அதேபோல கவர்ச்சி பாடல்களில் ஆடுபவர்களுக்கு ஆடையை பொறுத்துதான் சம்பளம் வழங்குகின்றனர் எந்த அளவிற்கு கவர்ச்சி தெரியும்படி ஆடைகளை குறைத்து நடிக்கிகிறார்களோ அந்த அளவிற்கு சம்பளம் அவர்களுக்கு அதிகமாக இருக்கும்..

அதிக ஆடையை உடுத்தி இருந்தால் குறைவான சம்பளம் கிடைக்கும் என நடிகை காஜல் பசுபதி கூறி இருக்கிறார். இந்த  விஷயத்தை அறிந்த ரசிகர்கள் திரை உலகிற்கு பின்னால் இவ்வளவு சர்ச்சைகள் இருக்கிறதா என கேட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.