நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம் உண்மையா..? பொய்யா..? ரசிகர்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம் இதோ..!

kajal-agarwal-2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நடிகை சமீபத்தில் தன்னுடைய ஆசை காதலன் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அந்த வகையில் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு நமது நடிகை திரைப் படங்களில் நடிப்பேன் என அவருடைய ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் சமீபத்தில் சில காலம் நான் திரைப்படத்தில் இருந்து விலகப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் சமீபத்தில் இவர் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் மற்றும் நாகார்ஜுனாவின் கோஸ்ட் ஆகிய திரைப்படத்தில் கமிட்டாகி இருந்தார்.

ஆனால் தற்போது இந்த திரைப்படத்தில் இருந்து நடிகை காஜல்அகர்வால் விலகியதாக கூறப்படுகிறது இதற்கு முக்கிய காரணம் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக திரையுலக வட்டாரத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடிகை காஜல் தன்னுடைய சமூக வலைதள பக்கம் ஆன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தால் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இல்லை என்பது நன்றாகவே தெரிகிறது.

ஆனால் ஒரு சில ரசிகர்களோ நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய பழைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சில ரசிகர்கள் காஜல் தான் கர்ப்பமாக இருப்பதை மறைக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

kajal agarwal-1
kajal agarwal-1

இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா கூட தான் கர்ப்பமாக இருப்பதை வெகுநாளாக மறைத்து பின்னர் தான் குழந்தை  பிறகுதான் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார்.  இவ்வாறு அதை பார்க்கும் பொழுது நடிகை காஜல் அகர்வாலும் அதேபோல நடந்துகொள்வர் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.