கல்யாணமாகி ஓராண்டு ஆன நிலையில் அதை நினைவுப்படுத்தும் வகையில் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால் – வாழ்த்தும் ரசிகர்கள்.

kajal agarwal
kajal agarwal

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் ஆரம்பத்தில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் ஒரு கட்டத்தில் அஜித், விஜய் போன்றோர் உடன் கைகோர்த்து சூப்பர் ஹிட் கொடுத்தால் தென்னிந்திய சினிமாவில் இவர் பெயர் பட்டிதொட்டியெங்கும் பரவியது.

அதன் காரணமாக மற்ற மொழிகளிலும் வாய்ப்பு கிடைத்தது அதை திறம்பட கையாண்டு வெற்றி கொடுத்து வந்தார்.  ஒரு கட்டத்தில் தனது சம்பளத்தையும் உயர்த்தி கொண்டு மாஸ் காட்டினார் காஜல் அகர்வால் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் தனது நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சிறிது காலம் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் பட்டாளத்தை தன் வசப்படுத்திக் கொள்ள தனது கணவருடன் கனிமுன்னுக்கு  சென்ற இடங்களில் எல்லாம் குட்டையான டிரஸை போட்டுக் கொண்டு இவர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்.

இதனால் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார் ரசிகர்கள். ஒரு கட்டத்தில் காஜல் சினிமா, வெப் சீரிஸ் என கிடைக்கின்ற எல்லாத்திலும் கால் தடம் பதித்து வெற்றி கண்டார். தமிழில் தற்போது கூட இவர் இந்தியன் 2, சினாமிகா, பாரீஸ் பாரீஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் திடீரென கர்ப்பம் ஆனதை அடுத்து உடனடியாக ஒரு சில முக்கிய படங்களில் இருந்து பின்வாங்கினார். இந்த சமயத்தில் காஜல் அகர்வால் திருமணம் ஆகி ஓராண்டு ஆன நிலையில் அதனை நினைவுபடுத்தும் விதமாக மேக்கப் போட்ட புகைப்படத்தை வெளியிட்டு கேப்டனாக “மறக்க முடியாத அந்த நேரங்களில்” என அவர் கூறியுள்ளார்.

kajal agarwal
kajal agarwal