போதும் டா சாமி என சினிமாவிற்கு முட்டுக்கட்டை போட்ட நடிகை காஜல் அகர்வால்.! ஏன்..எதற்கு தெரியுமா.?

kajal-agarwal-11

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலர் திருமணம் செய்து கொண்டால் தங்களது மார்க்கெட் குறைந்துவிடுமோ என்ற எண்ணத்தில் பலரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.

ஆனால் தற்பொழுது உள்ள சில நடிகைகள் திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை காஜல் அகர்வால் இவர் கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து தனது கணவருடன் இணைந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். காஜல் அகர்வால் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் சுமாராகத்தான் இருந்து வந்தது அதன் பிறகு தனது மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் என்பதற்காக கவர்ச்சியில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார்.

அந்த வகையில் தெலுங்கில் பல திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார் இதன் மூலம் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படிப்பட்ட நிலையில் தளபதி விஜய்வுடன் மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அஜித் போன்ற தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் திரைப்படங்களிலும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

முன்பெல்லாம் திருமணத்திற்கு பிறகு படவாய்ப்புகள் கிடைக்காது ஆனால் தற்பொழுது அந்த காலம் மாறி திருமணமான பிறகும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் காஜல் அகர்வால் இவரைத் தொடர்ந்து சமந்தாவும் திருமணத்திற்கு பிறகு வெப் சீரியல், திரைப்படம் என்ற கலக்கி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு காஜல் அகர்வால் ரசிகர்களின் பல கேள்விகலுக்கு பதிலளித்த வந்த இவர் என் கணவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தச் சொல்லி விட்டால் கண்டிப்பாக விட்டுவிடுவேன் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கும் பதில் அளித்திருந்தார்.

kagal agarwal
kagal agarwal

இப்படிப்பட்ட நிலையில் இவரின் நெருங்கிய வட்டாரங்கள் காஜல் அகர்வால் பட வாய்ப்புகள் வேண்டாம் என்று உறுதி இருப்பதாகவும் இதற்கு காரணம் மும்பையில் உள்ள  தனது கணவரின் பிசினஸ் முழுவதையும் இவர்தான் தனது கணவருடன் இணைந்து முழு கவனத்தையும் செலுத்த உள்ளார் என்றும் கூறப்படுகிறது.