தற்பொழுது இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதற்காக சோசியல் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது மற்றும் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது போன்றவற்றை செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
முன்பெல்லாம் ஒரு நடிகையை பார்ப்பதே கடினம் ஆனால் தற்பொழுது நாள்தோறும் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் சாதாரணமாக பேசி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலும் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இவர் தமிழில் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அந்த வகையில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் ஆனால் பல படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
இந்நிலையில் தற்பொழுது லாக் டவுன் காரணத்தினால் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டிலேயே முடங்கி கிடக்கும் காஜல்அகர்வால் ரசிகர்களிடம் தொடர்ந்து லைவ் சட்டில் பேசி வருகிறார்.
அந்தவகையில் பொதுவாக திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் திரைப்படங்களில் அதாவது சோலோ ஹீரோயினாக நடிக்க மாட்டார்கள் அப்படி திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் மட்டும் தான் நடிப்பார்கள் என்பது காலம் காலமாக நடந்து வருகிறது.
ஆனால் காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பிறகும் திருமணத்திற்கு முன்பு எப்படி சோலோ ஹீரோயினாக வலம் வந்ததோ அதே போல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். எனவே ரசிகர்கள் திருமணத்திற்குப் பிறகும் திரைப் படங்களில் நடித்து வருகிறீர்கள் என்று இது குறித்து உங்கள் குடும்பத்தில் எதுவும் கூறவில்லையா என்று கேட்டுள்ளார்கள்.
அதற்கு காஜல் அகர்வால் எனது கணவர் மற்றும் குடும்பம் நான் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால் இதுவரையிலும் என்னால் நடிக்க முடியும் என்று தெரியவில்லை எனவே என் கணவர் நடிக்க வேண்டாம் என்று சொன்னால் கண்டிப்பாக நான் திரைப் படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார் காஜல் அகர்வால்.
பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் எங்கு திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற காலத்தில் காஜல்அகர்வால் என்னவனுக்காக தனது மொத்த கெரியரையும் விட்டு தருவது பெரிய விஷயம்தான் என்று ரசிகர்கள் இவரை பாராட்டி வருகிறார்கள்.