தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால் இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார் இருப்பினும் தமிழில் தான் இவருக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது. தமிழில் உச்ச நட்சத்திர நடிகர்களான சூர்யா, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகரின் படங்களில் நடித்து..
தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார் மேலும் இவருக்கென அங்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. நடிகை காஜல் அகர்வால் கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட்டாகினாலும் 2020 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரும் தொழிலதிபருமான கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த உடனே கர்ப்பமானதால் இவர் கமிட் ஆன படங்களில் நடிக்க முடியாமல் அனைத்திலும் இருந்து பின் வாங்கினார். நடிகை காஜல் அகர்வாலுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இப்பொழுது தனது குடும்பத்துடன் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த காஜல் அகர்வால் மீண்டும் நடிக்க வருவதாக சொல்லி உள்ளார்.
ஆனால் தற்பொழுது சற்று உடல் எடை குண்டாக இருப்பதால் வாய்ப்புகள் பெரிய அளவு கிடைக்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்து அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஏன் சமீபத்தில் கூட இவர் பிக்னிக் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
‘மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களும் குட்டி குஷ்பு போல தற்பொழுது உடல் எடையை கூட்டி விட்டீர்கள் என கூறி கமெண்ட்களை வெளியிட்டு வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்களை..