தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக டாப் இடத்தை பிடித்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இவ்வாறு புகழ்பெற்ற நடிகையான இவர் 2008ஆம் ஆண்டு வெளிவந்த பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். அறிமுகமான சில கால கட்டத்திலேயே தனது சிறந்த நடிப்புத் திறமையினால் விஜய், அஜித், சூர்யா என தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்தார்.
பொதுவாக நடிகைகள் சினிமாவில் ஓரளவிற்கு வளர்ந்து விட்டாள் திருமணம் செய்துகொள்ள யோசிப்பார்கள் அப்படி திருமணம் செய்து கொண்டாலும் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் தங்களது அழகு குறைந்து விட்டால் சினிமாவில் தங்களுக்கென இருக்கும் மார்க்கெட் குறைந்துவிடுமோ என்ற எண்ணத்தில் இருந்து வருவார்கள்.
இந்நிலையில் காஜல் அகர்வால் 2020ஆம் ஆண்டு கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ரசிகர்கள் பலர் இதற்கு மேல் நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு கூட என் கணவர் என்ன சொல்கிறாரோ அதை பொறுத்து தான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட காஜல் அகர்வால் மற்ற நடிகைகளைப் போலில்லாமல் திருமணம் செய்துகொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் தற்பொழுது இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிவப்பு நிற ட்ரான்ஸ்போர்டான அழகிய உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.