தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது திறமையையும் அழகையும் காட்டி தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால் குறிப்பாக தமிழில் இவர் டாப் நடிகர்கள் படங்களில் மட்டுமே அண்மைகாலமாக நடித்து வந்து தொடர்ந்து வாய்ப்புகளை அள்ளி இருந்த நிலையில் திடீரென நடிகை காஜல் அகர்வால்.
தனது நண்பரும் தொழிலதிபருமான கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்கள் காஜல் அகர்வால் மற்றும் கிச்சுலு வெளிநாடுகளுக்கு சென்று ஊர் சுற்றினர். இதனால் பெருமளவு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது சிறு இடைவெளிக்குப் பிறகு வெப்சீரிஸ் மற்றும் படங்களில் கமிட்டாகினார்.
திடீரென நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமானதை அடுத்து அதிலிருந்து அனைத்திலும் விலகினார். குறிப்பாக தெலுங்கில் சிரஞ்சீவியின் ஆச்சாரியா, தமிழில் இந்தியன் 2, ரவுடி பேபி ஆகிய படங்களில் இருந்து பின்வாங்கினார். ஒருவழியாக இவருக்கு ஏப்ரல் 19ம் தேதி குழந்தை பிறந்தது.
மேலும் காஜல் அகர்வால் மகன் பிறந்ததை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு ரசிகர்களிடையே வாழ்த்து பெற்றார். பின்பு காஜல் அகர்வாலின் குழந்தைக்கு பெயரும் சூட்டப்பட்டு உள்ளது அதாவது கிச்சலு நீல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து தனது குழந்தையின் புகைப்படத்தை ரசிகர்கள் பார்க்க ரொம்ப ஆசைப்பட்டனர்.
அதை நிறைவேற்றும் வகையில் நடிகை காஜல் அகர்வால் தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அசத்தி உள்ளார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை அள்ளி குவித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அழகில் ஜொலிக்கும் காஜல் அகர்வாலின் மகன்.