சினிமாவிலுள்ள பலர் படிப்புக்காக கஷ்டப்படும் பலருக்கு உதவி செய்து வருகிறார்கள். இப்படி உதவி செய்வதில் நடிகைகளை விட நடிகர்கள் தான் அதிக ஆர்வம் காட்டுவர். இந்நிலையில் தற்பொழுது நடிகை காஜல் அகர்வாளிடம் மாணவி ஒருவர் கல்வி படிப்பதற்காக பண உதவி கேட்டுள்ளார்.
இதனை அறிந்த காஜல் அகர்வால் உடனே அந்தப் பெண்ணிடம் மிகப் பெரிய தொகையை வழங்கியுள்ளார். இதனை அறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இன்று அனைவரும் காஜல் அகர்வாளுக்கு என்று பாராட்டுகளை கூறிவருகிறார்கள்.
அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த அந்த மாணவி காஜல் அகர்வாலிடம் ட்விட்டரின் மூலம் கல்வி உதவித் தொகையை கேட்டுள்ளார். அதோடு அந்தப் பெண் கல்லூரி கட்டணம் கட்டினால் தான் கல்லூரிக்கு செல்ல முடியும். அந்த வகையில் ரூபாய் 83 ஆயிரம் தேவைப்படுகிறது தற்பொழுது பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறேன் என்று கூறியிருந்தார்.
இவ்வாறு அறிந்து கொண்ட காஜல் அகர்வால் அந்தப்பெண்ணை ட்விட்டரின் மூலம் பேசி வங்கி கணக்கு விவரங்களைப் பெற்று அவரது வங்கியில் ரூபாய் ஒரு லட்சம் டெபாசிட் செய்துள்ளார். அந்தப் பெண்ணிடம் விரைவாக ஒரு லட்சம் பணத்தை கொடுத்தால் அனைவரும் காஜல் அகர்வாலை பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 மற்றும் சிரஞ்சீவியுடன் இணைந்து ஆச்சாரியா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.