நடிகை காஜல் அகர்வாலுக்கு வளையகாப்பு விழா நடத்திய கௌதம் கிச்லு.! அதுவும் எங்கு தெரியுமா.? புகைப்படத்துடன் இதோ.

kajal agarwal 1

சினிமா துறையில் பொதுவாக நடிகை பெரிதாக திருமணத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள் அப்படி திருமணம் செய்து கொண்டாலும் திருமணமான சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றுவிடுவார்கள். அதுவும் முக்கியமாக குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார்கள் இவ்வாறு இதை அனைத்தையும் செய்தால் எங்கு தனது அழகு போய்விடுமோ சினிமாவில் தனக்கென இருக்கும் மார்க்கெட் குறைந்துவிடும் என்ற எண்ணத்தில் சிங்கிளாக வாழ்ந்து வரும் ஏராளமான நடிகைகள் உள்ளார்கள்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் திருமணம் செய்துகொண்டு உடனே குழந்தை ஏற்றுக் கொள்வதற்க்கும் ஓகே சொன்ன நடிகை தான் காஜல் அகர்வால்.  இவர் தமிழில் விஜய்,அஜித்,தனுஷ் என இன்னும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார்.

முன்னணி நடிகையான காஜல் அகர்வால் பல வருடங்களாக கௌதம் கிச்சிவை காதலித்து வந்துள்ளார். அதனை மிகவும் சஸ்பென்சாக வைத்திருந்தார். பிறகு நீண்ட வருடம் கழித்து 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கௌதம் கிச்லுவும் காஜல் அகர்வாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களின் திருமணமும் கொரோனா அதிகரித்ததால் ஊரடங்கு போட்ட நிலையில் அந்த சமயத்தில் சிம்பிளாக ஓரளவிற்கு தெரிந்தவர்களை மட்டும் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள்.  இப்படிப்பட்ட நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் வளையல் அணியும் விழா நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியும் முக்கியமான சில நபர்கள் மட்டுமே கலந்து உள்ளார்கள் இது துபாயில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளிவந்து ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.

kajal agarwal
kajal agarwal