ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கும் காஜல் அகர்வாளின் 7 திரைப்படங்கள்.!

kajal agarwal 2
kajal agarwal 2

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழில், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் 2019ஆம் ஆண்டு கோமாளி திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

திரைப்படத்திற்குப் பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். ஆனால் சில பிரச்சனைகளால் சில ஆண்டுகளாக எந்த திரைப்படமும் வெளிவராமல் இருக்கிறது.  அதே நேரத்தில் இவர் ஹேய் சினாமிகா என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சில நாட்கள் கழித்து இத்திரைப்படத்தின் முழுமையாக நடித்து முடித்து கொடுத்துவிட்டார். ஆனால் கொரோனா காரணமாக தற்போது ரிலீசாகாமல் உள்ளது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது.

அதன் பிறகு தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க இருந்த திரிஷா விலகிய ஆச்சாரியார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அந்த வகையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது ஆனால் தற்போது கொரோனா தாக்கம்  அதிகமாக இருப்பதால் தற்போது படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழில் இரண்டு திரைப்படங்களிலும் தெலுங்கில் ஒரு திரைப் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் .ஆனால் தற்பொழுது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அனைத்து திரைப்படங்களில் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.