Surya : அஜித் – ஷாலினியை தொடர்ந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சூர்யா – ஜோதிகா இவர்கள் இருவரும் காதலித்து பெற்றவர்கள் சம்மத்துடன் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர் திருமணமானதை அடுத்து ஜோதிகா குடும்ப பொறுப்புகளை அதிகம் ஏற்றார் இதனால் சில வருடங்கள் படங்களில் நடிக்கவே இல்லை நீண்ட இடைவேளைக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன் பிறகு ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சூர்யா வித்தியாசமான படங்களில் நடிக்கிறார். இப்படி இருவரும் தனக்கென ஒரு ட்ராக்கில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் இருவரும் நடித்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்ததிரைப்படம் காக்க காக்க.
படத்தில் ஆக்சன் ரொமான்டிக் சீன் சிறப்பாக இருந்ததால் அதிக நாட்கள் ஓடி 50 கோடி வசூல் செய்தது காக்க காக்க படம் வெளியாகி இத்துடன் 20 வருடங்களாகி உள்ளதை அடுத்து படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில நினைவுகளை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொன்னது..
காக்க காக்க படத்தில் நடிக்க சூர்யா ஜோதிகா வந்த போது இருவரும் நல்ல நண்பர்கள் தான் வந்தார்கள் அதன் பிறகு படத்தில் ஏற்பட்ட நல்ல நெருக்கம் ரொமான்ஸ் இதெல்லாம் நிஜமாகவே தோன்றியது அப்படித்தான் அவர்களின் காதல் மலர்ந்தது.. அது பார்க்க மிகவும் அழகாக இருந்தது இருந்தாலும்..
அவர்களது காதலால் சில பிரச்சனைகளும் ஏற்பட்டது சூர்யா மீது உள்ள காதலால் ஜோதிகா அவரை டேக் கேர் பண்ண ஆரம்பித்தார் அதனால் அந்த படத்தின் முக்கியமான ஸ்டண்ட் சீன் ஒன்றில் நடிப்பது மிகவும் ரிஸ்க் என்பதால் சூர்யா நடிக்க கூடாது என ஜோதிகா எச்சரித்தாராம்..
சூர்யாவும் ஜோதிகா பேச்சைக் கேட்டு நடிக்க மாட்டேன் சொல்லிவிட்டார் அதன் பிறகு தான் என் நண்பனை தண்ணீரில் ஆழம் எவ்வளவு பாதுகாப்பு என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு மேலே வந்தான் அதன் பிறகு சூர்யா டூப் வேண்டாம் நான் நடிக்கிறேன் என கூறினாராம்..