நடிப்பதை முற்றிலும் தவிர்க்க உள்ள நடிகை ஜோதிகா.! அடுத்ததாக அவர் பணியாற்றவுள்ள துறை இது தான்.!

surya-jothika
surya-jothika

சமீபத்தில் கோலிவுட்டே கொண்டாடி வரும் திரைப்படம் தான் விக்ரம்.  இத்திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தது. அதாவது இத்திரைப்படத்தில் கமலஹாசனுக்கு சூர்யா என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு சூர்யாவிற்கு சினிமாவில் ஒரு அந்தஸ்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு எதிர்பார்ப்பும் இருந்துவரும் நிலையில் கமலஹாசனுக்கு அவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்யை ஏற்படுத்தியது. மேலும் விக்ரம் 3 திரைப்படத்தில் சூர்யாவிற்கு நல்ல ஒரு கேரக்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக சமூக நலன் சார்ந்த விஷயங்களில் சூர்யா மற்றும் ஜோதிகா ஈடுபட்டு வருகின்றனர்.  அந்த வகையில் பல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வரும் நிலையில் பல்வேறு பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர்.  ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு இந்த ஒரு நடிகருக்கு ஜோடியாக நடிப்பது இல்லை.

திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்து வந்த இவர் சமீப காலங்களாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  இப்படிப்பட்ட நிலையில் இதற்கு மேல் சுத்தமாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்க்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

சூர்யாவின் குடும்பத்தினர்கள் ஜோதிகாவை இதற்குமேல் திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று அதிகம் அழுத்தம் வருவதாக கூறப்படுகிறது.  ஆனால் ஒரு தரப்பு ரசிகர்கள் ஜோதிகா அரசியலில் ஈடுபட இருப்பதனால்தான் திரைப்படங்களில் இருந்து விலகவுள்ளார் என்றும் கூறிவருகிறார்கள்.

அதாவது நடிகை ஜோதிகாவின் அக்காவான நக்மா ஒரு அரசியல்வாதியாக தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும் ஜோதிகா திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி மற்ற துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசைவுடையவர்.

அந்த வகையில் சூர்யாவிற்கும் சமூகம் சார்ந்த விஷயங்களில் குரல் கொடுத்து அவ்வப்போது தன்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறார் இதன்மூலம் ஜோதிகா அரசியலுக்கு வருவதற்கு சூரியா ஒரு காரணமாக இருப்பார் என கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இதற்கு மேல் ஜோதிகா படங்களில் நடிப்பதில்லை என சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.  இவர் அரசியலில் ஈடுபட உள்ளதால்தான் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் சூர்யாவின் குடும்பத்தினர்கள் ஜோதிகாவிற்கு அழுத்தம் கொடுக்கிறார்களா என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.