நடிப்பையும் தாண்டி வேறு ஒரு ரூட்டை பிடித்து அசத்தும் நடிகை ஜோதிகா – ஆச்சரியப்படும் சினிமா துறை.

jothika
jothika

90 காலகட்டங்களில் இருந்து தற்பொழுது வரையிலும் நடித்து அசத்தி வருபவர் நடிகை ஜோதிகா 35 வயதைத் தாண்டிய பிறகும் சினிமா உலகில் ஒரு நடிகையை முக்கிய மற்றும் ஹீரோயினாக நடிப்பது பெரிய விஷயம் ஆனால் அதை திறன்பட செய்து அசத்தி வருகிறார். காரணம் இவர் நடிப்பு மற்றும் சினிமா மீது இருக்கின்ற ஆர்வம் என கூறப்படுகிறது.

பெரும்பாலும் சினிமா நடிகைகள் பலரும் திருமணம் செய்து கொண்டபிறகு பெருமளவு சினிமாவில் ஆர்வம் காட்ட மாட்டார்கள் ஆனால் நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் சினிமா உலகில் தற்போதும் சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். இவர் சமீபத்தில் தனது 50-வது திரைப்படமான உடன்பிறப்பே திரைப்படத்தில் சிறப்பாக நடித்து அசத்தினார்.

அதை தொடர்ந்து தற்போது பல்வேறு திரைப்படங்களை தன்வசப்படுத்தி இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அவர் நடிப்பையும் தாண்டி வேற ஒரு ரூட்டை தற்போது பிடித்துள்ளதாக கூறப்படுகிறது விரைவிலேயே நடிகை ஜோதிகா இயக்குனர் அவதாரம் எடுக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

நடிகை ஜோதிகா எப்பொழுதும் புதிய புதிய செயல்களை செய்ய அதிகம் ஆர்வம் உடையவராக தான் இதுவரை இருந்துள்ளார் அந்த வகையில் நடிப்பைத் தாண்டி தற்போது இவர் இயக்குனர் அவதாரம் பல ஆலோசனைகளை பிறகு எடுத்துள்ள தான் இதிலும் அவர் நிச்சயம் வெற்றிபெறுவார் என்று பலரும் கூறுகின்றனர் மேலும் அவர் வெகு விரைவிலேயே ஒரு படத்தை எடுக்க இருக்கிறார்.

jothika
jothika

தீவிர கதை விவாதத்தில் தற்போது ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஜோதிகா இயக்கும் படத்தை அவரது கணவர் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்கும் என தெரியவந்துள்ளது.