தமிழில் டாப் நடிகராக இருந்து என்ன பிரயோஜனம்.. விஜய், அஜித் செய்யாத சாதனையை செய்த நடிகை ஜோதிகா.!

jothika
jothika

தமிழ் சினிமாவில் முன்னணி டாப் நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய், அஜித் செய்யாத சாதனையை ஜோதிகா செய்திருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜோதிகா சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.

அதன் பிறகு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காமிக்காமல் இருந்து வந்த இவர் சிறிது இடைவேளைக்கு பிறகு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் சோலோ ஹீரோயினாக இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வெற்றியை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் பல வருடங்கள் கழித்து காதல் என்ற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த வருகிறார். இவர் சோலோவாக நடித்த படம் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கும் நிலையில் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது சமீப காலங்களாக யூடியூப் இருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் யூடியூப் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் நிலையில் சினிமாவில் வெளியாகும் அனைத்து படங்கள் மற்றும் பாடல்கள் யூட்யூப்பில் பதிவிட அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அப்படி தென்னிந்திய திரைப்படங்களுக்கு ஹிந்தி யூடியூப் மார்க்கெட்டில் பெரிய வரவேற்பு உண்டு. எனவே தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகும் படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

அப்படி செய்யப்பட்ட படங்களில் பெல்லம்கொன்டா சீனிவாஸ், ராகுல் பிரதீப் சிங் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த ‘ஜெய ஜானகி நாயகா’ என்ற படம் ஹிந்தியில் ‘கூன்கர்’ என்ற தலைப்பில் நான்கு வருடங்களுக்கு முன்பு யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இந்த படம் 700 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதனை அடுத்து தமிழில் வெளியாகி ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூப்பில் வெளியான ஜோதிகாவின் படம் தான் ‘ராட்சசி’ இந்த படம் ‘மேடம் கீதாராணி’ என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் ஆன நிலையில் 321 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அதாவது 32 கோடி உடன் முதலிடத்தில் உள்ளது. இதனை அடுத்து விஜய் நடிப்பில் வெளிவந்த ‘ஜில்லா’ படம் ‘போலீஸ்வாலா குண்டா 2’ என்ற பெயரில் வெளியாகி 257 மில்லியன் பார்வையாளர்களை பற்றி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. தமிழில் ராட்சசி படம் கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்கியா, ராஜ் சத்யன் மற்றும் பலருடைய நடிப்பில் வெளியானது.