பொய் பித்தலாட்ட வேலை ஜூலிக்கு தான் கரெக்டாக இருக்கும் என புதிய சீரியலில் அட்வகேட்டாக அறிமுகப்படுத்தும் விஜய் டிவி.!

vijay-tv
vijay-tv

சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர்தான் ஜூலி இதில் இவர் பேசிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ரசிகர்களும் வீர தமிழச்சி என கொண்டாடி வந்தனர். இதன் மூலம் புகழ்பெற்ற ஜூலி பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

இதில் அடிக்கடி ஓவியாவோடு சண்டை போட்டு வந்த நிலையில் தொடர்ந்து பல பொய் பித்தலாட்ட வேலைகளை செய்துவர கமலஹாசன் அவர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டு குறும்படத்தின் மூலம் உண்மையை தெரிந்துக் கொண்ட நிலையில் அனைவரும் இவரை கழுவி ஊற்றி வந்தனர். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ஜூலி வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

போகும் இடமெல்லாம் இவரை ரசிகர்கள் திட்டி வந்தனர் தொடர்ந்து பல நெகட்டிவ் விமர்சனங்களை ஜூலி பெற்று வந்த நிலையில் பிறகு மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டார் இதன் மூலம் இவருக்கு ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்து வரும் ஜூலி தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிரபல சீரியல் ஒன்றில் இரண்டாவது பாகத்தில் அட்விகேட்டாக அறிமுகமாக இருக்கிறார்.

எனவே அட்வகேட் என்றால் பொதுவாக நிறைய பொய் சொல்ல வேண்டும் எனவே இதனை ரசிகர்கள் பொதுவாக ஜூலிக்கு இயற்கையாகவே பொய் சொல்வது என்பது கைவந்த கலை எனவே அவருக்கு செட்டாவது போல தான் விஜய் டிவி வாய்ப்பு கொடுத்து இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றார்கள். அதாவது சமீபத்தில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முதல் பாகம் நிறைவு பெற்ற நிலையில் இந்த சீரியலில் இரண்டாவது பாகம் விரைவில் துவங்க இருக்கிறது.

இந்த சீரியலில் கதாநாயகன் வெற்றி வில்லனாகவும், அபி கலெக்டராகவும் மாற இருக்கும் நிலையில் தன்னுடைய கணவர் என்று கூட பார்க்காமல் வெற்றியை சிறையில் அடைக்க முடிவு செய்து இருக்கிறார் எனவே வெற்றியின் மீது ஆதாரத்துடன் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார். ஆனால் எப்படியோ இதிலிருந்து வெற்றி தப்பித்து விட மீண்டும் அபி ஆதாரத்தை தயார் செய்து கொடுக்கும் பொழுது ஜூலி வக்கீலாக என்ட்ரி கொடுக்கிறார்.

எனவே இவர் தான் வெற்றியை ஜாமீனில் வெளியில் எடுக்கிறார். அந்த நேரத்தில் ஜூலி அபியிடம் மாவட்ட கலெக்டராக வேலை செய்வதற்கு எக்கச்சக்கமான வேலைகள் உள்ளது அந்த வேலையையும் பார்த்துக் கொண்டு வெற்றியும் சேர்த்து பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களே! இதெல்லாம் ரொம்ப தப்புங்க மேடம் என்று மிகவும் திமிராக பேசுகிறார்.