தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவர் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தை சிவாஜி பிரமோஷன் தயாரித்து இருந்தது. இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்ததோடு மட்டுமில்லாமல் பட்டிதொட்டியெங்கும் பரவியது இதை போன்று இப்படமும் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய ஹிட் அடித்தது மற்றும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் மிக சிறப்பாக இருக்கும் என பல சினிமா பிரபலங்கள் கூறி வந்தாலும் அதை பற்றிய எந்த ஒரு செய்தியும் சமீப காலமாக வராத இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பக்கத்தை பற்றிய செய்திகள் வெளியாகி வருகின்றன இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது அதனை உறுதிப்படுத்தும் விதமாக இப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதை சமீபத்தில் ராகவா லாரன்ஸ் உறுதி செய்தார்.
இப்படத்தின் மையக்கரு வேட்டை மன்னன் ,சந்திரமுகி இடையே நடக்கும் மோதலை இப்படத்தின் காட்சியாக இருக்கும் என்பதால் இப்படத்தில் வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் அவர்கள் நடிக்க இருப்பதாகவும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஏற்கனவே ஜோதிகா அவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதால் இப்படத்திலும் அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என சினிமா பிரபலங்களும் மற்றும் ரசிகர்களும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து படக்குழுவினர் அவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜோதிகா அவர்கள் சமீபகாலமாக முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேடி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதனால் இப்படத்திலும் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜோதிகா இப்படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் கூறாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.