ஜோதிகா எடுத்த அதிரடி முடிவால்..!தயாரிப்பாளர்கள் ஷாக்..!

jothika
jothika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா. இவர் ஹீரோயினாக நடித்த காலகட்டத்தில் அனைவரின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.

இவருக்கு 1999ஆம் ஆண்டு வாலி திரைபடத்தில் ஹீரோயினியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்.

பிறகு நீண்ட நாள் காதலரான சூர்யாவை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா படங்களில் நடிக்காமல் குடும்பத்தை மட்டும் பார்த்து வந்தார்.பிறகு 2015ஆம் ஆண்டு 36 வயதினிலே திரை படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

இதனை தொடர்ந்து காற்றின் மொழி,மகளிர் மட்டும் போன்ற இன்னும் சில படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றியை தரவில்லை.  அந்த வகையில் ஜோதிகாவின் நெருங்கிய தோழி ஒருவர் ஜோதிகா 2007ஆம் ஆண்டு வெளியான மொழி திரைப்படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பார் எனவே அவர் மாற்றுத்திறனாளியாக நடித்தது தான் ஜோதிகா செய்த மிகப்பெரிய தவறு என்று கூறியுள்ளார்.

jothika-mozhi
jothika-mozhi

இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் ஜோதிகா தன்னை படங்களில் ஹீரோயினாக நடிக்க வைக்க ஆசைப்படும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இனிமேல் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று தெளிவாக  கூறியுள்ளாராம்.