தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த அடுத்த திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் வெற்றினை தர வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினிகாந்த் அவர்கள் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கும் இரண்டு திரைப்படங்களிலும் நடிக்க இருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார். ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் தெலுங்கு பிரபல நடிகரின் மனைவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நடிகை தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக லால் சலாம் திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்க இந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நிலையில் தற்பொழுது தமிழ், தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜேந்திரன் அவர்களுடைய மனைவியும், நடிகையுமான ஜீவிதா இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 1988ஆம் ஆண்டு வெளிவந்த வளைகாப்பு என்ற திரைப்படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார்.
தற்பொழுது லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 7ஆம் தேதி முதல் துவங்க இருப்பதாகவும் அதற்கான முதற்கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உடன் ஜீவிதா கலந்துக்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிகை ஜீவிதா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.