பெண்களாலும் நாட்டை ஆள முடியும் என்ற தத்துவத்திற்கு உரியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இவரின் தன்னம்பிக்கையினாளும், திறமையினாலும், விடாமுயற்சியாலும் ஒட்டுமொத்த மக்களின் மனதிலும் அம்மா என்ற அந்தஸ்துடன் குடியேறினார்.
இவர் எப்படி பிரபலமடைந்தாரோ அது போலவே சினிமாவிலும் இவர் ஒரு சிறந்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுதான் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என்று அனைவரும் எந்த நடிகர் நடிகைகளை தன் படத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து அவர்களை தேடி போய் பட வாய்ப்புகளை கொடுக்கிறார்கள்.
ஆனால் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் எந்த நடிகர் நடிகைகளுக்கு திரைப்படங்களில் நடிக்க ஆசை இருக்கிறதோ அவர்கள்தான் தயாரிப்பாளர்களின் அலுவலங்களுக்கு சென்று வாய்ப்பை பெற வேண்டும். அந்த வகையில் ஜெயலலிதாவும் மற்றொரு பிரபலமும் இருவரும் இவ்வாறு தேடிச்சென்ற தான் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்கள்.
இந்நிலையில் ஜெயலலிதாவுடன் மற்றொரு பிரபலம் ஜெயலலிதாவை விடவே சினிமாவில் அசைக்க முடியாத நாயகியாக இன்றளவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.அவர் யார் என்பதை பற்றி தற்போது பார்ப்போம்.
முன்னாள் முதலமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதா வெள்ளை நிற ஆடை திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று நேர்முகத்தேர்வு நடைபெற்று வந்தது அதில் ஜெயலலிதா வெற்றி பெற்றதால் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜெயலலிதாவுடன் சென்றிருந்த மற்றொரு பிரபலமான ஹேமாமாலினி இதில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
ஹேமாமாலினி இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் மற்ற பல படங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பு திறமையின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பால் ஈர்த்தார். தற்பொழுது வரையிலும் இவருக்கு என்று சில ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இவரின் வசீகரமான உடல் அமைப்பு, நடிப்புத் திறமை போன்றவை ரசிகர்களைக் கட்டிப் போட்டது.
1970ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை இவருடைய ஆதிக்கம் தான் இந்திய சினிமாவில் இருந்து வந்தது. அதுமட்டுமல்லாமல் இவர் நடிக்கும் அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
ஹேமாமாலினி அப்பொழுதே இந்திய அளவில் உள்ள நடிகைகளில் இவர் தான் அதிக சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தோல்வியை எப்படி வெற்றியாக மாற்றலாம் என்பதற்கு மற்ற நடிகைகளுக்கு முன்னுதாரணமாக ஹேமாமாலினி திகழ்கிறார்.