தாவணியில் திருவிழாக்கு வந்த தேவதை போல காட்சியளிக்கும் தெகிடி பட நடிகை..! இணையத்தில் மெர்சல் காமிக்கும் புகைப்படம் இதோ..!

janani-ayir

actress janani latest photos viral in social media: தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத ஹிட் கொடுத்த திரைப்படங்களில் தெகிடி திரைப்படமும் ஒன்று இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் அவர்கள் நடித்திருப்பார் மேலும் அவருக்கு ஜோடியாக ஜனனி நடித்துள்ளார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியது மட்டுமல்லாமல் தன்னுடைய அழகின் மூலம் ஏகத்திற்கு ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

பின்னர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் வெளியான அவன் இவன் திரை படத்தில் கூட போலீஸ் கதாபாத்திரத்தில் ஜனனி நடித்துள்ளார் இப்படம் மூலமாக ஜனனி முன்னணி நடிகராக வலம் வருவார் என எண்ணிய நிலையில் ஏமாற்றம் தான் மிச்சம்.

பொதுவாக பாலா திரை படத்தில் அறிமுகமாகும் நடிகைகள் சரி நடிகரும் சரி நிச்சயம் சினிமாவில் எதிர்பார்க்காத லெவலுக்கு சென்று விடுவார்கள் ஆனால் ஜனனி மட்டும் ஒரு சில திரைப் படங்களில் மட்டும் நடித்து விட்டு பின்னர் சரியான படவாய்ப்பு இல்லாததன் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

எப்படியாவது இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி விடலாம் என்று எண்ணிய நமது நடிகைக்கு அங்கும் ஏமாற்றம்தான் கிடைத்தது.  இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த ஐயரை தூக்கி விட்டு வேறு ஜனனி என சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய பெயரை மாற்றம் செய்துள்ளார்.

இவ்வாறு மாற்றம் செய்தது பெயர் அழகாக இருந்தால் பட வாய்ப்பு கிடைக்குமா என்ற  எண்ணத்தில் என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் நமது அம்மணி தன்னுடைய க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் சமீபத்தில் திருவிழாவிற்கு வந்த தேவதை போல பாவாடை தாவணியில் ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். இவ்வாறு வெளிவந்த புகைப்படமானது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

janani
janani