பொதுவாக சினிமா என்றால் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் அவர்களை அட்ஜஸ்ட் பண்ணி கொள்ள வேண்டும் என்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் முன்னணி நடிகைகளாக இருந்தாலும் கூட சில தப்பான நபர்கள் இவ்வாறு அவர்களிடம் கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இதன் காரணமாகவே ஏராளமான வெள்ளித்திரை நடிகைகள் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு சின்னத்திரையில் சீரியல்களில் நடிப்பதை தொடங்கியவர்கள் பலர் உள்ளார்கள். இவ்வாறு வெள்ளித்திரையில் இருந்து விலகி தற்போது சின்னத்திரையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஜானகிதேவி.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த திருமகள், கயல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். இதற்கு முன்பு இவர் வெள்ளித்திரையில் காவலன், ரம்மி,சுந்தரபாண்டியன் உள்ளிட்ட இன்னும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார் இவரின் பேச்சு திறமை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இவர் பாஸ்டிவ் ரோல் மட்டும்தான் நடிப்பேன் என்று கூறாமல் நெகட்டிவ் ரோல் பலவற்றிலும் நடித்துள்ளார் இதனாலேயே ரசிகர்களுக்கு இவரை அதிக அளவில் பிடித்தது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் நான் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு பல தடைகளை சந்தித்தேன் எங்களது குடும்பத்திலேயே பல எதிர்ப்புகள் இருந்து வந்தது.
இதையெல்லாம் தாண்டி தான் நான் சினிமாவில் நடிப்பதை தொடர்ந்தேன் பிறகு எங்கு சென்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு சினிமாத்துறை மட்டுமல்லாமல் எந்த தொழில் என்றாலும் இவ்வாறு நடப்பது வழக்கமாக இருக்கிறது.
இவ்வாறு ஆண்கள் ஒருசில பெண்களை தப்பான பார்வையோடு தான் பார்க்கின்றார்கள் எனவே சினிமாவில் வளர வேண்டும் என்று ஆர்வமுடன் இருக்கும் நடிகைகளுக்கு இதேபோல் பிரச்சனைகள் இருப்பதால் அவர்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். அந்த வகையில் தான் நானும் வெள்ளித்திரையில் அடிப்பதை நிறுத்திவிட்டு தற்போது சின்னத்திரையில் நடிப்பதை தொடங்கினேன் என்று இன்னும் ஏராளமான தகவல்களை கூறியுள்ளார்.