நீண்ட வருடங்களாக சினிமாவில் பயணித்தாலும் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் தட்டுத்தடுமாறி வருபவர் நடிகை பூர்ணா. மலையாள நடிகையான பூர்ணாவுக்கு தமிழ் சினிமாவிலும் ஆரம்பத்தில் நல்ல மார்க்கெட் கிடைத்தது.
ஆனால் அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றதால் இவர் ஆள் அட்ரஸ்சே தெரியாமல் போனார் என்றே கூறவேண்டும் இருப்பினும் சினிமா உலகம் இவரை கைவிடாமல் அவ்வப்போது பட வாய்ப்பு கொடுத்து அவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
நடிகை பூர்ணா தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் நல்ல பெயரை மக்கள் மத்தியில் சம்பாதித்தார் அதை தொடர்ந்து கந்தக்கோட்டை, ஆடுபுலி, வித்தகன், கொடிவீரன், சக்கரவர்த்தி, காப்பான் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
படத்தின் கதைக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய ரெடியாக இருப்பவர்தான் பூர்ணா என்பது குறிப்பிடத்தக்கது. அதன் விளைவாகவே பல வருடங்கள் கழித்து தற்போது சிறப்பான படங்களில் நடித்து வருவதால் மெல்லமெல்ல தனக்கான இடத்தை அங்கீகாரமாக பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
இருப்பினும் அவருடைய உடல்எடை ஏற்றுவதால் வாய்ப்புகள் குறையத் தொடங்குகின்றன என்ற ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது இருக்கிறது அதற்காக உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள யோகா மற்றும் ஜிம் கதிகென கிடக்கிறார். இருப்பினும் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களையும் அள்ளி வீசுவது பூர்ணாவின் வழக்கமாக இருந்துள்ளது. அதுபோல தற்போது மாடர்ன் உடையில் ஜொலிக்கும் பூர்ணாவின் அழகிய புகைப்படம்.