பூர்ணிமாவிடம் பேச பயப்படுகிறாரா இந்துஜா? வைரலாகும் பதிவு..

bigg boss 7
bigg boss 7

Bigg Boss 7: பிக் பாஸ் வீட்டிற்கு பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷன்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா இருவரும் சென்றிருந்தனர். அப்பொழுது சரியாக பூர்ணிமாவிடம் இந்துஜா பேசவில்லை பூர்ணிமாவும் இந்துஜாவும் பெஸ்ட் ஃபிரண்ட்சாம் எனவே இந்துஜா பேசாதது பூர்ணிமாவிற்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்தது.

மேலும் வெளியில் அதிகம் நெகட்டிவ் இருப்பதினால் தான் இந்துஜா தன்னிடம் பேசவில்லை என்றும் புலம்பி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி 58 நாட்களை கடந்து மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பூர்ணிமா கலந்து கொண்டார்.

உங்களுக்கு ஒரு சப்போர்ட் தேவை.. பழனிச்சாமியை கல்யாணம் பண்ணிக்கோ பாக்கியாவை பார்த்து கேட்கும் ராதிகா – பாக்கியலட்சுமி ப்ரோமோ

சமீப காலங்களாக இவர் மாயாவுடன் சேர்ந்து செய்தது ரசிகர்கள் மத்தியில் கடும் வெறுப்பினை ஏற்படுத்தியது. எனவே பூர்ணிமா விரைவில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழலில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக இந்துஜா நடித்திருக்கும் பார்க்கிங் படம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

எனவே இந்த படத்தின் டிரைலர் வெளியிடுவதற்காக பிக் பாஸ் வீட்டிற்கு இவர்கள் வந்தனர். அப்பொழுது இந்துஜா தனது கல்லூரி காலத் தோழியான பூர்ணிமாவை கண்டு கொள்ளவில்லை எனவே ஏன் இவ்வாறு இந்துஜா பேசவில்லை என பூர்ணிமா கண் கலங்கினார். இந்நிலையில் இந்துஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூர்ணிமாவை செய்து விட்டதாக கூறப்படுகிறது.

வாரிசு பட நடிகரின் மனைவி தான் சிவரஞ்சினியா.! கண்ணழகியை ஞாபகம் இருக்கிறதா..

அதோடு மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் பதிவில் சரியானதை செய்யும் நேரம் எல்லாமே சரியானதுதான்..! என்றும் குறிப்பிட்டுவுள்ளார். எனவே பூர்ணிமாவை அன்ஃபாலோ செய்ததால் தான் இந்த பதிவை மறைமுகமாக கூறுகிறாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.