actress indhuja latest cute look photos: தமிழ் சினிமாவில் முதன் முதலாக மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. இவ்வாறு திரைப்படத்தில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்துஜா தற்போது பிரபலமான நடிகையாக வளர்ந்து விட்டார்.
அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகில் என்ற திரைப்படத்தில் கூட கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்திருப்பார்.இதுவரை வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் இவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்தது.
நடிகை இந்துஜா மேயாதமான் திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அறுபதாவது மாநிலம், மேற்கூரை, பில்லாபாண்டி, பூமராங் ,மகாமுனி, சூப்பர் டூப்பர் போன்ற பல்வேறு திரைப்படங்களில் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சூப்பர் டூப்பர் திரைப்படத்தில் கூட மிக மோசமான மொட்ட காட்சி ஒன்றில் நடிகை இந்துஜா நடித்துள்ளார். ஆரம்பத்தில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது எப்படியாவது பட வாய்ப்பை பெற வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் இப்படி கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டாராம்.
அந்த வகையில் சமூக வலைதளப் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா ஆரம்பத்தில் தனது அழகை முகத்தில் மட்டுமே ஜொலிக்க வைத்த நமது அம்மணி தற்போது கிளாமர் உடையிலும் தன்னுடைய கவர்ச்சியை வாரி வீசி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்த வண்ணமே இருக்கும் நிலையில் தற்போது பாத்டப்பில் மினுமினுக்கும் ஆடை அணிந்து கொண்டு படுத்திருக்கும் அந்த காட்சியானது சமூகவலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.