தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விஜய் பட நடிகை தமிழ் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டும் ஆனால் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.
இவ்வாறு விஜய் படம் நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா என்ற கேள்வி எழுந்துள்ளது. எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை இலியானா. மேலும் தமிழில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் முக்கியமாக டோலிவுட்டில் தான் இவருக்கு நல்ல மார்க்கெட் இருந்து வந்தது எனவே டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வர படப்பிடிப்பில் பிசியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயின் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார் மேலும் சங்கர் இயக்கத்தில் ஒல்லி பெல்லி பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடி அசத்தியிருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்றும் மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்காக கோலிவுட்டை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவருக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் பேசிவிட்டு அட்வான்ஸ் வாங்கியுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் கால் ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால் தயாரிப்பாளர் அட்வான்ஸ் பணத்தை கேட்டுள்ளார் ஆனால் இனியா அந்த பணத்தை தரவில்லை எனவே கடுப்பான அந்த தயாரிப்பாளர் இலியானா மீது தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் புகார் அளித்துள்ளாராம்.
எனவே அந்தப் புகாரின் அடிப்படையில் நடிகை தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை விரைவில் இலியானா தரப்பிலிருந்து தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.