இலியானாவிற்கு குழந்தை பிறந்தது.. என்ன குழந்தை தெரியுமா? வைரல் புகைப்படம்

IIeana D'cruz
IIeana D'cruz

actress Ileana D’Cruz; சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான பிரபலங்கள் திருமணம் செய்துக் கொண்டவரை விவாகரத்து செய்துவிட்டு தனக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொண்டு வருகின்றனர். மறுபுறம் திருமணமே செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். முக்கியமாக பாலிவுட்டில் தான் இது மிகவும் ஃபேமஸாக இருந்து வருகிறது.

அதாவது பாலிவுட்டில் இருக்கும் ஏராளமான நடிகைகள் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து வந்து குழந்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். அப்படி தற்பொழுது நடிகை இலியானாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. திரையுலகில் பிரபல நடிகையான இலியானா விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த படத்தினை தொடர்ந்து தமிழில் சில திரைப்படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்த படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே பாலிவுட்டில் பிஸியாக இருந்து வந்த இலியானா சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலியானா கர்பமாக இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் திருமணமே ஆகாமல் எப்படி இவர் கர்ப்பமானார் என்பது சர்ச்சையை என்ற சர்ச்சை எழுந்தது.

சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் கடந்த மே மாதம் தன்னுடைய காதலர் Michael Dolan என்பவரை இலியானா திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் இது யாருக்கும் தெரியாது என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

IIeana D'cruz
IIeana D’cruz

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த இலியானா தொடர்ந்து தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியீட்டு மிகவும் ஆக்டிவாக உள்ளார். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இலியானாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது தனது ஆண் குழந்தைக்கு koa phoenix Dolan என பெயர் வைத்துள்ளாராம். அந்த குழந்தையின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.