90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் ஹீரா இவர் தன்னுடைய வசீகரமான தோற்றத்தாலும் சிறந்த நடிப்பாலும் அனைத்து ரசிகர்களையும் கட்டிப்போட்டவர். இவர் வெறும் ரசிகர்களை மட்டும் கட்டிப் போடவில்லை சில நடிகர்களையும் தனது காதல் வலையில் கட்டிப் போட்டுள்ளார்.
ஹிரா 1991ஆம் ஆண்டு இதயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று மிகப்பெரிய வெற்றியடைந்தது அதன்பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது மடமடவென தமிழ் சினிமாவில் முன்னேறி முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
அப்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்த சரத்குமார் மீது ஒரு கிரஸ் வந்தது அது காதலாக மாறியது. அதன்பிறகு இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். மேலும் சரத்குமார் ஹீராவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு பெண் கேட்டு ஹீரா வீட்டிற்கு சென்றதாகவும் தகவல் வெளியானது அதன்பிறகு இவர்களின் காதலுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை இருவரும் தனித்தனியாக படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
அதன் பிறகு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே கிடையாது. பின்பு தொடரும் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது நடிகர் அஜித்திர்க்கும் ஹீராவுக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. அந்த நெருக்கம் தொடரும் திரைப்படத்தில் நடித்த பொழுது நெருக்கமான காட்சிகள் மூலம் வெளிப்பட்டது.
ஒரு காலகட்டத்தில் அஜித் ஹீராவுக்கு லவ் லெட்டர் எழுதியதெல்லாம் பல பத்திரிக்கைகளில் படித்து இருப்போம் இருவரும் தங்களுடைய காதலை நெருக்கமான காட்சிகளில் வெளிப்படுத்தி வந்தார்கள் ஆனால் அதன் பிறகு அஜித் குடும்பத்திற்கும் ஹீரா குடும்பத்திற்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிறந்து விட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
ஆனால் இவர்கள் இருவரும் ஏன் பிரிந்தார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இந்த இரண்டு காதல் தோல்விக்குப் பிறகு இந்த நடிகை திருமணமே செய்து கொள்ளாமல் தற்பொழுது வரை ஒண்டிக்கட்டையாக வாழ்ந்துவருகிறார்.
ஆனால் அஜித் மற்றும் சரத்குமார் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்கள்.