நீண்ட நாட்களாக சினிமாவில் முகம் காட்டாமல் இருக்க இவர் தான் காரணமாம்..! உண்மையை ஒரேடியாக போட்டு உடைத்த நடிகை கவுதமி..!

gowthami

actress gowthamai latest news: தமிழ் சினிமாவை பொருத்த வரை பல்வேறு நடிகைகள் பிரபலமாக இருந்து பின்னர் ஆளே அட்ரஸ் இல்லாமல் போனவர்கள் ஏராளம். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் மறக்கவே முடியாது. அப்படித்தான் இளசுகளின் கனவு கன்னியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் தான் நடிகை கௌதமி.

இவர் நடித்த காலகட்டத்தில் நடிகர்கள் பலரும் கௌதமியுடன் திரைப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இவ்வாறு தன்னுடைய வசீகர தோற்றத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துவிட்டார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருந்த நமது நடிகை திடீரென சினிமாவில் தென்படாமல் மறைந்துவிட்டார். இவ்வாறு இவர் திரைப்படத்தில் நடித்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக ஆகிவிட்டது. இந்நிலையில் 1998ஆம் ஆண்டு சந்திப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்த திருமணமானது பாதியிலேயே முடிவுற்று விட்டது. இவ்வாறு இவர்கள் திருமணத்தின் மூலமாக இவருக்கு சுப்புலட்சுமி எனும் மகள் பிறந்தாள்.  பின்னர் உலக நாயகன் கமலஹாசனுடன் லிவிங் டுகெதர் முறைப்படி பத்து வருடங்களாக வாழ்ந்து வரும் நடிகை கௌதமி அப்பொழுது கூட திரைப் படத்தில் நடிக்காமல் கமலின் திரைப்படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வந்தார்.

இவ்வாறு நடிகை கௌதமி திரைப்படத்தில் நடக்காமல் இருப்பதற்கு அவருடைய மகள் தான் காரணமாக ஏனெனில் அவரை தனியாக இருந்து எப்படி கரை சேர்ப்பது என்ற காரணத்தினால் டான் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வருகிறாராம்.

இப்பொழுது அவருடைய மகள் நன்றாக வளர்ந்து விட்டாராம் ஆகையால் மறுபடியும் திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம் இந்நிலையில் சமீபத்தில் கமலுடன் பாபநாசம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.  இதை தொடர்ந்து தற்போது மற்றொரு திரைப் படத்திலும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

gowthami
gowthami