வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மாஸ்டர் பட நடிகை. காரணம் கொரோனா தான்.!

Vijay-In-Master

முன்பெல்லாம் ஒரு நடிகை சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்றால் அதற்கு பட வாய்ப்பிற்காக பல இடங்களுக்கு அலைய வேண்டும். ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படி கிடையாது சமூக வலைதளங்களில் தனது நடிப்புத் திறமை மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு எளிதில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.

அதிலும் ஒரு சிலர் அறிமுகமாகிய சில படங்களிலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விடுகிறார்கள். அந்தவகையில் ஒருவர் தான் கௌரி கிஷன்.

தமிழில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கூட்டணியில் வெளிவந்த 96 திரைப்படத்தின் மூலம் குட்டி ஜானுவாக அறிமுகமானார். தமிழில் இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் இவரின் அழகினாலும், நடிப்பு திறமை நாளும் எளிதில் அனைவரையும் கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

139467184_408444690429595_7206724846471697695_n
139467184_408444690429595_7206724846471697695_n

இந்நிலையில் இவருக்கு கொரோன தோற்று உறுதியாகியுள்ளது.  எனவே தனது இன்ஸ்டாகிராமில் டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  அனைவருக்கும் என் முதல் வணக்கம். நான் கொரோனா தோற்றால் பாதிப்படைந்து உள்ளேன். எனவே நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும்  ரசிகர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை.நான் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தனிமையில் அவர்கள் கூறுவதை கேட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.