நடிகை கௌரி கிஷன் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகிய 96 என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகம் ஆனார், இவர் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் பிரபலமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்தார், அதேபோல் 96 திரைப்படம் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டு எடுக்கப்பட்டது அதிலும் நடித்திருந்தார். தமிழில் வெளியாகிய 96 திரைப்படத்தில் சிறுவயது திரிஷாவாக கௌரி கிஷன் நடித்திருந்தார்.
சிறுவயது த்ரிஷா வாக குட்டி ஜானுவாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார், இந்த நிலையில் தற்பொழுது இவர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இளம் வயதிலேயே நடிக்க வந்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டதால் இவர் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் குட்டி ஜானும் அடிக்கடி புகை படத்தை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது பாரங்கல்லின் மீது மஞ்ச கலர் உடையில் மல்லாக்க படுத்திருக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.