‘ஆட்டோகிராப்’ பட நடிகை கோபிகாவா இது? குடும்பம் குட்டி என ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய புகைப்படம்..

Actress Gopika Family
Actress Gopika Family

Actress Gopika Family: சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான நடிகைகள் தாங்கள் நடித்த ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியவர்கள் பலர் இருக்கின்றனர். மேலும் சினிமாவில் பெரிதாக பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்காத காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர்களும் உள்ளனர்.

அப்படி சினிமாவை விட்டு விலகிய பிரபல நடிகை கோபிகாவின் தற்போதைய புகைப்படம் சோசியல் வைரலாகி வருகிறது. மலையாள சினிமாவின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை கோபிகா மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் நடிக்க தொடங்கினார். அப்படி தமிழில் ஆட்டோகிராப் படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் இப்படத்தில் சேர இயக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

விவகாரத்திற்கு பின் 2 குழந்தைகளுக்கு தாயாகும் நடிகை சமந்தா.! இறுதி வாழ்க்கை இவர்களுடன் தான்..

அந்த வகையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த மனசுக்குள்ளே காதல் வந்துச்சா பாடல் பட்டித் தொட்டியெங்கும் பிரபலமானது. தற்பொழுது வரையிலும் இந்த பாடலுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர் இதன் மூலம் கிடைத்த புகழினால் தமிழ், மலையாளம், தெலுங்கு என தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்ற கோபிகா 2013ஆம் ஆண்டு சினிமாவை விட்டு விலகினார்.

Actress Gopika Family
Actress Gopika Family

அந்த வகையில் கடைசியாக Bharya Athra Pora என்ற படத்தில் கடைசியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் கடந்த 2008ஆம் ஆண்டு அஜிலேஷ் சாக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான கோபிகா தற்பொழுது தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடனும் வாழ்ந்து வருகிறார்.

Actress Gopika Family
Actress Gopika Family

அப்படி கோபிகாவின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ஆட்டோகிராப் படத்தில் நடித்த கோபிகாவா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதோ கோபிகாவின் குடும்ப புகைப்படம்.