ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக பங்குப்பெற்று பிரபலமடைந்தவர் நடிகை கேப்ரியலா. இவருக்கு நடனத்தின் மீது அதிக ஆர்வம் இருந்ததாலும் சிறந்த நடன திறமையின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு 7ஜி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
குழந்தை நட்சத்திரமாக இந்த சீரியல் மூலம் அறிமுகமான இவர் இந்த சீரியலுக்கு பிறகு திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் சுருதிஹாசனின் தங்கையாக நடித்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட இன்னும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்து இருந்தாலும் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற மாட்டோம் என்பதை அறிந்த கேப்ரில்லா இந்நிகழ்ச்சி முடியப்போகும் இறுதியில் 5 லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறி இருந்தார்கள் ஆனால் கேப்ரில்லா மட்டும் இதுவரையிலும் எந்த திரைப்படத்திலும் நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறவில்லை இப்படிப்பட்ட நிலையில் ஒரு நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையில் நடந்த பயணத்தை பற்றி கூறியிருந்தார்.
அந்தவகையில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் மற்றும் மாஸ்டர் இரண்டு திரைப்படங்களிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் இந்த வாய்ப்புகளை மிஸ் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார்.